அளவுக்கு மீறினால் அமிழ்தும் நஞ்சாகும். அளவறிந்து உண்ணாதவன் செரிக்கமுடியாமல் அவதிக்கு உள்ளாவான். அளவுக்கு மீறி பாடம் புகட்டினால் குழந்தையின் மூளைத்திறன் பாதிக்கப்படும். மயிற்பீலி மிகவும் லேசானது தான். ஆனாலும் அதை அளவுக்கு மீறி ஒரு வண்டியில் ஏற்றினால் வண்டியின் அச்சு முறிந்து போகும். இந்தக் கருத்தை மிக அழகாக விளக்குகிறது கீழ்க்காணும் குறள்.
" பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டம்
சால மிகுத்துப் பெயின்"
எனவே அளவுக்கு மீறும் எதுவுமே அழிவில் தான் முடியும்.
" பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டம்
சால மிகுத்துப் பெயின்"
எனவே அளவுக்கு மீறும் எதுவுமே அழிவில் தான் முடியும்.