ஞாயிறு, 23 ஆகஸ்ட், 2009

மொழிக்கெல்லாம் நீதானே அரசி !

திசையெட்டும் இசைகொட்டும் தமிழே ! - உந்தன்
தேன்சொட்டும் சொல்லெமெக்கு அமிழ்தே !
சோறின்றி யாம் வாழ்வோம் தினமும் - நிந்தன்
சுவையின்றி உயிர்வாழ மாட்டோமே நாங்கள்.
எமக்கென்று பிறந்திட்ட அமுதே - எங்கள்
உடலெங்கும் பாய்கின்ற உணர்வென்னும் திருவே !
உதிரத்தில் உயிராக கரைந்திட்ட கருவே ! - எங்கள்
வாழ்வுக்கு வழிகாட்டும் தீபத்தின் ஒளியே !
மொழிக்கெல்லாம் நீதானே அரசி ! - உலகில்
வேறெந்த மொழிவெல்லும் உன்னோடு உரசி ?
புதுமை பல படைக்கின்றாய் இன்று - காலம்
படைத்திட்ட கணினிக்குள் புகுந்திட்டாய் நன்று !
இணையத்தில் தவழ்கின்ற தாயே ! - புவிதன்னில்
எங்கெங்கும் ஒளிர்கின்றாய் நீயே !
என்றைக்கும் நீ எமக்கு வேண்டும்.
எம்மோடு இரண்டறக் கலந்திட வேண்டும்.
நீயன்றி இவ்வுலகில் வேறென்ன வேண்டும் ?
உன்னணைப்பில் எம்வாழ்வு முழுதாக வேண்டும்.
உனக்குள்ளே யாம் மூழ்கி முத்தெடுக்க வேண்டும்.
உன்னாழம் காண்பதற்கு யாம் தேற வேண்டும்.
உனையறிய எமக்கறிவு கோடி வேண்டும்.
உலகமெலாம் நின்னடியில் கூட வேண்டும் !

கருத்துகள் இல்லை: