சிந்தனை பத்து -1
- இதயங்கள் இணையும் பொழுது உறவுக்குப் பதியம் போடப்படுகிறது.
- மதியை இழக்கும் பொழுது விதி மீது நம்பிக்கை ஏற்படுகிறது.
- அறிவின் தொடர்ச்சி ஆக்கம். படிப்பின் தொடர்ச்சி படைப்பு.
- கத்தி எடுப்பது மட்டுமா வன்முறை? கடுஞ் சொல்லும் ஒருவகை வன்முறையே.
- வளர்பிறையும் தேய்பிறையும் வெறும் காட்சிப் பிழைகளே.
- நல்லது யார்க்கும் பணிவு. என்றும் வேண்டும் துணிவு.
- செல்வத்தில் சிறந்தது அறிவு. அறிந்ததில் வேண்டும் தெளிவு.
- கல்லாகிப் போன மண்ணில் காய்க்காது செடி கொடிகள்.
- இருளாகிப் போன மனதில் முளைவிடாது கற்பனைகள்.
- எண்ணங்கள் நல்லதானால் ஏற்றங்கள் ஓடி வரும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக